Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் உயிருக்கு ஆபத்து: ஃபுல் மேக்கப்பில் வந்து புகார் அளித்த தீபா!

Advertiesment
என் உயிருக்கு ஆபத்து: ஃபுல் மேக்கப்பில் வந்து புகார் அளித்த தீபா!
, வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (19:08 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பெயருக்கு கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். ஆனால், இன்று தினகரன் மற்றும் சசிகலாவால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார். 
அந்த புகாரில் தீபா பின்வரும் செய்திகளை குறிப்பிட்டிருந்தார். எனது அத்தை மரணத்தில் மர்மம் இருந்ததால், நான் அது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பினேன். 
 
இதனால் சசிகலா தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக்கு மிரட்டல்கள் வர துவங்கியது. சசிகலா மற்றும் தினகரனின் தூண்டுதலில் சிலர் நள்ளிரவு நேரங்களில் என் வீட்டின் வளாகத்தில் நுழைந்து இடையூறுகள் செய்தனர். 
 
சத்தம் கேட்டு வெளியே வந்ததும் மேல் மாடியில் இருக்கும் என் தம்பி தீபக்கை பார்க்க வந்ததாக கூறினார்கள். இது போன்று பல பிரச்சனைகள் வருகிறது. எனவே, எனக்கும் என் கணவர் மாதவனின் உயிருக்கும், உடமைக்கும் ஏதாவது ஆபத்து நேரிட்டால் அதர்கு சசிகலா குடும்பமே பொறுப்பு. 
 
சசிகலா மற்றும் தினகரனின் ஆட்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆதலால் எனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காட்டுப்பகுதியில் உல்லாசம்; கத்தியுடன் துரத்திய நபர்: அதிர வைக்கும் கள்ளக்காதலியின் வாக்குமூலம்!