Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: ஆர்.கே.நகர் ப்ளான் போடும் தினகரன்?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: ஆர்.கே.நகர் ப்ளான் போடும் தினகரன்?
, வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (19:48 IST)
திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ போஸ்க்கு திடீரென நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று திடீரென மரணம் அடைந்தார். 
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர், தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பே மரணம் அடைந்தார். 
 
அவருக்கு பதிலாக அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் போஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இவரும் இன்று எதிர்பாராத வகையில் மரணமடைந்ததால், திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலில் எந்த மாதிரியான போட்டி இருக்கும் என எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஜெயலலிதா இறந்த பிறகு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவை வீழ்த்தி சுயேட்சையாக நின்றி டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். 
 
இதேபோல், திருபரங்குன்றத்திலும் தினகரன் தனது பலத்தை காட்டக்கூடும் என தெரிகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் கணிசமான முக்குலத்தோர் வாக்குகள் உள்ளன. 
 
எனவே தினகரன் தனது அணியில் உள்ள வைகை செல்வன் போன்ற பிரபலமான முக்குலத்து வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்க கூடும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெப்துனியா தமிழ் தளத்தில் வேலைவாய்ப்பு