Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தியேட்டரில் படம் பார்த்தவர் திடீர் மரணம்:நடந்தது என்ன?

Advertiesment
தியேட்டரில் படம் பார்த்தவர் திடீர் மரணம்:நடந்தது என்ன?
, புதன், 19 ஜூன் 2019 (16:32 IST)
திருவள்ளூர் அருகே தியேட்டரில் படம் பார்த்தவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.

இவர் நேற்று மாலை திருவள்ளூரிலுள்ள ஒரு திரையரங்கில் புதிதாக திரைக்கு வந்த “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என்ற திரைப்படத்தை பார்த்துகொண்டிருந்தார்.

படம் முடிந்த நிலையில் அனைவரும் வெளியே சென்றனர். ஆனால் நரசிம்மன் மட்டும் இருக்கையிலேயே உட்கார்ந்திருந்தார்.

இதனை கவனித்த தியேட்டர் ஊழியர்கள், நரசிம்மன் அருகில் சென்று எழுப்ப முயற்சித்தபோது மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இது குறித்து திருவள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நரசிம்மனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நரசிம்மனை பரிசோதனை செய்த டாக்டர், நரசிம்மன் மாரடைப்பில் இறந்ததாக கூறினார். இதனை குறித்து திருவள்ளூர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்டி அடிக்க முயன்று கழுத்து உடைந்த இளைஞர் – டிக் டாக் வீடியோவால் வந்த வினை