Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரங்கணி தீ விபத்து; பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

Advertiesment
குரங்கணி தீ விபத்து; பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
, வெள்ளி, 23 மார்ச் 2018 (07:56 IST)
குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஏற்கனவே 17 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வந்த திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியிருப்பதால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் மார்ச் 11 ந் தேதியன்று சென்னையை சேர்ந்த 27 பேரும், ஈரோட்டை சேர்ந்த 12 பேரும் இரு பிரிவுகளாக மொத்தம் 39 பேர் மலையேற சென்றனர். அப்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயில் கருகி 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிய நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
 
தமிழக சட்டசபையில் தீ விபத்து குறித்து நீதி விசாரணை செய்து 2 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தவிடப்பட்டுள்ளது. அதன்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யமிஸ்ரா சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி பழனிசாமி அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னையில் இன்று நடக்கிறது