Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரங்கணி தீ விபத்து குறித்து விசாரிக்க அதிகாரி இன்று போடி வருகை

குரங்கணி தீ விபத்து குறித்து விசாரிக்க அதிகாரி இன்று போடி வருகை
, புதன், 21 மார்ச் 2018 (07:38 IST)
குரங்கணி தீ விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா இன்று போடிக்கு வருகிறார்.
போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையான குரங்கணி  மலைப்பகுதியிலுள்ள ஒத்தமரம் பகுதியில் கடந்த 11 ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்று திரும்பி கொண்டிருந்த சென்னை மற்றும் கோயமுத்தூர்,ஈரோட்டினை சேர்ந்த 36 பேர் சிக்கினர். சம்பவ இடத்திலே 9 பேர் பலியாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 25 நபர்களில் 8 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. 
 
இந்நிலையில் தமிழக சட்டசபையில் தீ விபத்து குறித்து நீதி விசாரணை செய்து 2 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்திட உத்தவிடப்பட்டுள்ளது. அதன்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யமிஸ்ரா சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை போடிக்கு வருகை தருகிறார். பின்னர் நாளை குரங்கணி ஒத்தமரம் பகுதிக்கு சென்று பார்வையிடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் நுழைந்திருக்கும் ரத யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு