எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

Mahendran
வியாழன், 11 டிசம்பர் 2025 (17:50 IST)
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையின் கீழ், கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று  முடிவடைய இருந்த காலக்கெடுவை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை டிசம்பர் 14 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அல்லது வாக்காளர் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம்.
 
சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்படும்.
 
டிசம்பர் 14-க்குள் படிவத்தை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாது.
 
வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், உரிமைகோரல் காலத்தில் படிவம் 6-ஐ பயன்படுத்தி புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments