Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேனீக்கள் கொட்டி இறந்த பென்குயின்கள்- அரிதினும் அரிய நிகழ்வு

Advertiesment
அரிதினும் அரிய நிகழ்வு
, திங்கள், 20 செப்டம்பர் 2021 (23:59 IST)

கேப் டௌன் அருகே, அரிதிலும் அரிதாக நடக்கும் நிகழ்வு ஒன்றில் அழியும் நிலையில் உள்ள இனமான ஆப்பிரிக்க பென்குயின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் கொல்லப்பட்டுள்ளன.

மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குயின்கள் இவ்வாறு இறந்துள்ளன என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பறவை இன பாதுகாவலர்கள் கூறுகிறார்கள்.

சிம்சன்ஸ்டவுன் எனும் ஊரில் உள்ள இரூந்த பென்குயின் காலனி, அங்கிருந்த கடற்கரை ஒன்றில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அவற்றின் உடலில் தேனீக்கள் கொட்டியதைத் தவிர வேறு எந்த காயமும் தென்படவில்லை.

பென்குயின்களின் கண்களைச் சுற்றி தேனீக்கள் கொட்டி இருப்பது தெரியவந்துள்ளதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களுக்கு கொரோனா:; 3 நாட்கள் விடுமுறை