தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களாக அதிமுக அமைச்சர்கள்,திமுக எம்பிகள், எம்.எல்.,ஏக்கள்,திமுக பிரமுகர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வந்தனர்.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்நிலையில், இன்று ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதற்கு ஸ்டாலின், பனங்காட்டுநரி சலசலப்புகளுக்கு அஞ்சாது அதுபோல் நான் கலைஞரின் மகன் எமர்ஜென்சியை பார்த்தவன் இந்த சலசலப்புகளுகு அஞ்ச மாட்டேன் எனத் தெரிவித்தார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின், தனது தேர்தல் பரப்புரையின்போது, என் சகோதரி வீட்டில்வருமான வரிசோதனை நடத்தியவர்கள்…தைரியமிருந்தால் என் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தட்டும்…முடிஞ்சா வந்து பாரு என சவால் விட்டு தனது முகவரியை கூறியுள்ளார்.