Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் தீவிர விசாரணையில் தாசில்தார் கைது ! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Advertiesment
லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் தீவிர விசாரணையில் தாசில்தார் கைது ! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
, ஞாயிறு, 7 ஜூலை 2019 (18:47 IST)
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள வட்டாட்சியர் கூடுதல் அலுவலகம் பகுதியில் உள்ள தமிழ்நாடு கேபிள் டி.வி கார்ப்பரேஷனின் கரூர் வட்டாட்சியராகவும், கரூர் நகரத்தின் நில அளவை தனி வட்டாட்சியராகவும் பதவி வகித்த வந்தவர் பாலு என்கின்ற பாலசுந்தரம்,  இந்நிலையில், இதே கரூர் நகரில் வசிக்கும் சீத்தாலெட்சுமி என்கின்ற பெண்மணி தனது பட்டாவில் உட்பிரிவிற்காக விண்ணப்பித்துள்ள நிலையில் அதற்காக தாசில்தார் பாலசுந்தரம் ரூ 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சீத்தாலெட்சுமி, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை திருச்சி டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீரென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். 
 
மதியம் 12 மணியிலிருந்து தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. மேலும், விசாரணையில் இவர் எத்தனை நபர்களிடம் இருந்து பணம் லஞ்சமாக பெற்றுள்ளார் என்பது குறித்தும், கம்யூட்டர் லேப்டாப் மற்றும் பிரிண்டர்களையும் மற்றும் சில ஆவணங்களையும் கைப்பற்றியதோடு, தாசில்தார் பாலசுந்தரத்தினையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்..
 
முன்னதாக மருத்துவமனை பரிசோதனைக்கும் ஆள்படுத்தப்பட்டார். 54 வயதாகும், தாசில்தார் பாலசுந்தரம் ஏற்கனவே கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பொறுப்பு வகித்ததும் மற்றும் சில துறைகளில் மேற்பட்ட பதவிகளில் வகித்தவர் என்பதும் குறிப்பிடத்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க அமெரிக்காவிடம் கோரும் முன்னாள் போராளிகள்