Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம் – மதுரையில் சோகம் !

Advertiesment
பள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம் – மதுரையில் சோகம் !
, புதன், 26 ஜூன் 2019 (14:30 IST)
மதுரையில் பள்ளி ஒன்றில் பால்கனி இடிந்து விழுந்ததில் மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மதுரையின் அடையாளமான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறம் உள்ளது ஆயிர வைசிய வெள்ளியம்பலம் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளி சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. சுமார் 500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இன்று காலை வழக்கம்போல பள்ளி தொடங்கி நடந்துகொண்டிருக்கும் போது முதல் மாடியில் இருந்த கைப்பிடி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கீழே நின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களான சக்திவேல், குமரவேல், வீரக்குமார் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக பள்ளிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சோக சம்பவத்தால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான விபத்து குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் இவ்வளவா? – புதிய சட்டம் விரைவில்..