கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவரான தலித் பெண் ஒருவர் தரையில் உட்காரவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியத்தில் தெற்கு திட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவர் பதவி தலித்துக்கு ஒதுக்கப்பட்டதால் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சரவணகுமார் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் உள்பட இந்த ஊராட்சி மன்றத்தில் மொத்தம் ஆறு உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஊராட்சி மன்றத் துணை தலைவர் மோகன்ராஜ் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் மற்றொரு தலித் உறுப்பினர் ஆகிய இருவரையும் தரையில் உட்கார வைத்துள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.