வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கடலூர் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைக் கொண்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.