சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளததால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் வங்க கடலின் மத்தியப் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே ஜூன் 15 முதல் 18 வரை அரபிக்கடலில் கேரள, கர்நாடக கரையோரம், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் ரபிக்கடலில் கேரள, கர்நாடக கரையோரம், லட்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது