கடிகார பில்லை கொடுத்தால் முரசொலி மூலப்பத்திரத்தை காட்டுவீர்களா? பாஜக கேள்வி

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:06 IST)
அண்ணாமலை கையில் கட்டியுள்ள கைக்கடிகாரத்தின் பில்லை காண்பித்தால் முரசொலியின் மூலப்பத்திரத்தை காட்டுவீர்களா? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
 
 கடந்த சில நாட்களாக அண்ணாமலை கையில் கட்டியுள்ள கைக்கடிகாரத்தின் பில் எங்கே என அமைச்சர் செந்தில் குமார் உள்பட பல திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் இது குறித்த ஹேஷ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திமுகவினரின் கேள்விகளுக்கு அண்ணாமலை உள்பட பாஜகவினர் அதிரடியாக பதில் அளித்து வரும் நிலையில் தற்போது பாஜகவின் சிடி நிர்மல் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாக ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
முரசொலி மூல பத்திரத்தை தமிழகமே கேட்டும் இதுவரை திராவிட கோமாளிகளிடம் எந்த பதிலும் இல்லை!
 
நாளை கடிகாரத்தின் பில்லை கொடுத்தால் மூல பத்திரத்தை காட்டுவீர்களா அல்லது மக்கள் மன்றத்தில் திருடர்கள் என ஒப்புக்கொள்வீர்களா அறிவாலயம்?
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments