Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரணம் - குழு அமைத்த அரசு

Advertiesment
பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரணம் - குழு அமைத்த அரசு
, புதன், 9 ஜூன் 2021 (15:31 IST)
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு அரசின் நிவாரணம் தர 7 பேர் வழிகாட்டுதல் குழு அமைப்பு. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் தினமும் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
 
மேலும், குழந்தை 18 வயதை நிறைவு செய்யும்போது அந்தத் தொகை வட்டியோடு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு அரசின் நிவாரணம் தர 7 பேர் வழிகாட்டுதல் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வழிகாட்டுதல் குழுவின் தலைவராக நிதித்துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 3 -வது கொரோனா அலை தாக்குமா?