Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹால் இந்து கோவில் விவகாரம்; வழக்கு ஏற்கப்பட்டதால் லட்டு வழங்கி கொண்டாட்டம்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (15:26 IST)
தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறந்து பார்த்து தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோரிய மனு நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா பகுதியில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய மன்னர் ஷாஜகான் காலத்தில் கட்டப்பட்டதாகும். உலக அளவில் காதல் சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹாலை காண உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்பு ஒரு சிவன் கோவில் இருந்ததாகவும், அதை இடித்து அந்த பகுதியில் தாஜ்மஹால் கட்டப்பட்டதாகவும் நீண்ட காலமாக இந்துத்துவ அமைப்புகள் பல பேசி வருகின்றன. மேலும் தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளில் முந்தைய சிவன் கோவிலில் இருந்த சிலைகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

எனவே தாஜ்மஹாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளை திறந்து அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் ஆய்வு துறைக்கு உத்தரவிட வேண்டும் என அயோத்தி பாஜக செய்தி தொடர்பாளர் அலகாபாத் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்த மனுவை அலகாபாத் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இதை கொண்டாடும் விதமாக இந்து அமைப்பினர் சிலர் தாஜ்மஹால் உள்ள பகுதியில் இனிப்புகள் வழங்கியுள்ளனர். அதற்கு தடை விதித்த போலீஸார் இனிப்புகள் வழங்க கூடாது என திருப்பி அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments