சீமானால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரி திருச்சி சூர்யா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையில், தற்போதைய சூழலில் சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என அரசுத் தரப்பில் பதில் அளித்தது
இதன்பின்னர் மனுதாரரின் கோரிக்கை குறித்து டி.ஜி.பி., திருச்சி எஸ்.பி. தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி நிர்மல் குமார், விசாரணையை ஒத்திவைத்தார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானால் தனது உயிருக்கு ஆபத்து எனக் கூறி திருச்சி சிவா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் சாட்டை துரைமுருகன் தனக்கு மிரட்டலாக வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்றும் சீமான் குறித்து 15 ஆடியோ பதிவுகள் செய்ததால் பழிவாங்கும் நோக்கத்துடன் சீமான் தரப்பினர் செயல்படுகின்றனர் என்றும் திருச்சி சூர்யா குறிப்பிட்டுள்ளார்.