கொரோனாவால் உயிரிழந்த 36,200 குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 தர உத்தரவு

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (14:53 IST)
கொரோனாவால் உயிரிழந்த 36,200 குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் தர உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 841 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27,09,921 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 36,226 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 36,200 குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக நிவாரணம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு தெரிவிக்குமாறு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments