இன்று தமிழகம், புதுச்சேரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தமிழகத்தை கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் இன்று தமிழகம், புதுச்சேரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், வரும் நவ.10, 11ல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஏதன் பிறகு தமிழகத்தில் படிபடியாக மழை குறையலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.