அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த போவதாக அறிவித்து, அதற்கு காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால், காவல்துறையினர் அந்த கட்சிகளிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தொடர்ந்த வழக்கில் தான் இந்த உத்தரவு நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு வழங்குவதற்காக உரிய கட்டணம் நிர்ணயம் செய்து, அந்தந்த கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் கட்சியினர் தினமும் நடத்தும் கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு தருவது காவல்துறையின் பணி அல்ல என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதாகவும், ஒரு மணி நேரத்தில் பேரணியை முடிக்க வேண்டும் என்றும், பேரணி அல்லது பொதுக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால், நாம் தமிழர் கட்சியே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.