Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொடநாடு வழக்கு.. அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

கொடநாடு வழக்கு.. அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
, வெள்ளி, 6 அக்டோபர் 2023 (14:05 IST)
கொடநாடு வழக்கில் ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க தடை நீட்டிப்பு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொடநாடு வழக்கில் ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடையை நவம்பர் 2 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பதில் மனு தாக்கல் செய்ய உதயநிதி தரப்பில் அவகாசம் கோரியதை ஏற்று விசாரணை இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 7ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனத்திற்கு அர்த்தத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் தேடிக் கொண்டிருப்பதாகவும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிஞ்சிருக்க முடியாது என்றும், அந்த ஆடே காணாமல் போகும் போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பதிவு செய்திருந்தார்.

இந்த அறிக்கை எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவதூறு பரப்பும் வகையில் இருப்பதால் உதயநிதி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மான நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தான் இன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்