Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேவல் சண்டைக்கு நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி

Advertiesment
cock fight
, சனி, 14 ஜனவரி 2023 (16:34 IST)
ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைப்பாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம்பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டைக்கு நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு  ஈரோடு மாவட்டம்  மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி  இரண்டு வழக்குகள் சென்னை ஐகோர்டில் மனு தக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சேவல்களை துன்புறுத்தக்கூடாது. போட்டி நடைபெறக்கூடிய இடத்தில் ஒரு கால் நடை மருத்துவர் இருக்க வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சேவல்களுக்கு மது கொடுகக்கூடாது.

முக்கியமாக சேவல்களின் கால்களில் கத்தி கட்டக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் சேவல் சண்டை அனுமதி அலித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும்,  இந்தச் சண்டைக் காட்சியின்போது, குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் எந்த  நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று  நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுகள் கூறிய அண்ணாமலை