தமிழ்நாட்டில் இன்று 938 பேருக்கு கொரோனா உறுதி : 6 பேர் உயிரிழப்பு

Webdunia
சனி, 30 மே 2020 (18:31 IST)

தமிழ்நாட்டில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்  நாளையுடன் 4வது கட்ட பொது  ஊரடங்கு முடிவடையும் நிலையில் சில  தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனெவே உள்ளதுறை அமைச்சர் அமித் ஷா மாநில முதல்வர்களுடன் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கு என தெரிகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது : இன்று தமிழகத்தில் மேலும் 938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. இன்று 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம்  பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,980 பேராக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 687 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments