Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீ குடிக்க போனேன்: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவரின் அதிர்ச்சி பதில்

Webdunia
வியாழன், 7 மே 2020 (12:52 IST)
டீ குடிக்க போனேன்
சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென மாயமாகி டீ குடிக்க சென்றதாக கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த 29ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் திடீரென மாயமானதால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை கண்டுபிடிக்கும் பணியை முடுக்கி விடப்பட்டது
 
இந்த நிலையில் சில மணி நேரம் கழித்து அந்த முதியவர் தானாகவே கொரோனா வார்டுக்கு திரும்பி வந்து விட்டார். அவரிடம் நீங்கள் எங்கே சென்றீர்கள் என்று மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் கேட்ட போது, ‘டீ குடிக்கலாம் என்று வெளியே சென்றேன். ஆனால் டீ கடைகள் எதுவும் இல்லை என்பதால் திரும்பி வந்துவிட்டேன்’ என்று அவர் அசால்டாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் கூட பார்க்க அனுமதி இல்லை என்கிற நிலையில் இந்த நபர் சர்வசாதாரணமாக வெளியே சென்றதும், அந்த அளவுக்கு மருத்துவமனையில் பாதுகாப்பின்மை இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments