Publish Date: Sat, 09 May 2020 (16:18 IST)
Updated Date: Sat, 09 May 2020 (16:21 IST)
பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், சிறுகன்பூரை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணமானது. அவரது மனைவி இப்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அந்த நபர் சமீபத்தில் சென்னையில் இருந்து திரும்பியுள்ளார். அதனால் அவருக்குக் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவரது மனைவியை பெற்றோர் அவரிடம் இருந்து பிரித்து வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றார். அவரைத் தடுத்த போலிஸார் விசாரித்த போது தன் மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.