Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரிவைச் சந்திக்கும் ‘’கொரொனா இரண்டாம் அலை ’’!!

Advertiesment
சரிவைச் சந்திக்கும் ‘’கொரொனா  இரண்டாம் அலை ’’!!
, திங்கள், 7 ஜூன் 2021 (16:08 IST)
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிய நிலையில்  அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனாவால்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கும் சினிமா கலைஞர்களுக்கும்  முன்னணி நடிகர்கள், நடிகைகள், தொண்டு நிறுவனங்கள் ,  உள்ளிட்டோர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊடரங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் காரணத்தால் வெகு வேகமாகப் பரவி வந்த கொரொனா தாக்கல் சில நாட்களில் குறைந்துவிட்டது. இறப்புவிகிதமும் குறைந்துள்ளது. மேலு, கொரொனா தொற்றால் குணம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே கொரோனா தற்போது சரிவைச் சந்துள்ளதாக ஒரு தகவல் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

விரைவில் கொரொனா தாக்கம் குறைந்தால் மக்களும் தங்களின் தொழில்களைச் செய்யவும் போக்குவரத்துப் பயணம் செய்யவும், பள்ளிகள் திறக்கவும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் மக்கள் அரசு கூறும் சானிடைசர், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, இ பாஸ் முறைகளைப் கடைபிடித்தால் விரைவிலேயே இதிலிருந்து நாம் மீள முடிவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 நாள் திட்டம்... அறநிலையத்துறை அமைச்சரின் அதிரடிப் பேச்சு....