இயக்குனர் சிம்புதேவன் ஒரு வெற்றிப்படம் கொடுத்து நீண்ட ஆண்டுகளாகும் நிலையில் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாக அவர் இயக்கிய குறும்படம் ஒன்று அமையும் என சொல்லப்படுகிறது.
வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டும் தயாரித்த திரைப்படம் கசடதபற. இந்த படத்தின் 6 கதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் உருவாகி சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ரிலீஸாகவில்லை. விக்டிம் ஆந்தாலஜி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் விரைவில் சோனி லைவ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்போது இந்த ஆந்தாலஜியில் சிம்பு தேவன் இயக்கியுள்ள ஒரு குறும்படம் பார்த்த அனைவரின் பாராட்டுகளையும் குவித்துள்ளதாம். இந்த குறும்படம் மூலம் சிம்புதேவன் மீண்டும் கவனம் பெற்று பட வாய்ப்புகள் அதிகமாகும் என சொல்லப்படுகிறது.