திருச்சியில் செயல்பட்டு வந்த கொரோனா சோதனை மையம் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி உறையூரில் டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர் என்ற ஆய்வகம் செயல்பட்டு வந்தது. இதில் கொரோனா சோதனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதமும் மேலும் முடிவுகளில் குளறுபடியும் நடந்துள்ளது. கொரோனா இல்லாதவர்களுக்கும் கூட கொரோனா பாஸிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது.
இதனால் அந்த ஆய்வகத்துக்கு கடந்த வாரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடந்த விசாரணையில் அந்த ஆய்வக கட்டிடமே மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த முழுக் கட்டிடத்தையும் மூடி சீல் வைத்துள்ளனர்.