Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாராஷ்டிராவில் மேலும் 7,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Advertiesment
மகாராஷ்டிராவில் மேலும் 7,862 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி
, வெள்ளி, 10 ஜூலை 2020 (20:57 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனா தொற்றின் தாக்கல் இன்னும் குறையும் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 
இந்தியாவில் ஏழு லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரொனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை. தமிழகத்தில் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
 
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் தினம் தோறும் கொரொனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் இதுவரை இல்லாத அளவில் இன்று அதிகபட்சமாக 7,862 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
 
இதனால் அம்மாநிலத்தில் கொரொனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 2,38,461 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரோனாவால் 226 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் அங்கு இறந்தோரின் எண்ணிக்கை 9,893 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள்  எண்ணிக்கை  1,32,625 ஆக அதிகரித்துள்ளது.
 
மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3680, டிஸ்சார்ஜ் 4163: மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.#Covid19
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாத்தன்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய பாடகி சுசித்ரா