Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா எதிரொலி ! பொருளாதார ரீதியில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள போட்டோகிராபர்ஸ், வீடியோகிராபர்ஸ்

கொரோனா எதிரொலி ! பொருளாதார ரீதியில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள போட்டோகிராபர்ஸ், வீடியோகிராபர்ஸ்
, திங்கள், 20 ஏப்ரல் 2020 (21:12 IST)
கொரோனா எதிரொலி ! சீசன் இருந்தும் மண்டபங்கள் இருந்தும் திருமணங்கள் இருந்தும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்காமல் உள்ள நிலையால், பொருளாதார ரீதியில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள போட்டோகிராபர்ஸ் மற்றும் வீடியோகிராபர்ஸ்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால், இந்தியாவில் 144 ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டும், ஆங்காங்கே பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில், தமிழகத்தில் போட்டோகிராபர்ஸ் மற்றும் வீடியோகிராபர்ஸ் வேலைகள் மிகுந்த கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இந்நிலையில்,. கரூர் மாவட்டத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் புகைப்பட கலைஞராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்து வரும் நிலையில், ஒரு சிலர் ஸ்டூடியோக்களையும் வைத்துள்ளனர். கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி, சின்னதாராபுரம், பள்ளப்பட்டி, மாயனூர், இலாலாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 400 க்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்கள் உள்ளன. இந்நிலையில் இந்த ஸ்டூடியோக்களில் இருந்து வேலைகளுக்காக கலர் லேப்புகளும் இயங்கிய நிலையில் தற்போது இந்த கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 26 நாட்களாகியும், ஆங்காங்கே சீசன் இருந்தும், திருமண மண்டபங்கள் பூட்டியே இருப்பினும், திருமணங்கள் மட்டும் ஆங்காங்கே இல்லங்களிலும், குல தெய்வங்கள் கோயிலிலும் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது போட்டோகிராபர்ஸ், வீடியோகிராபர்ஸ்க்கு எந்த வித ஆர்டர்களும் கிடைக்க வில்லை, இந்நிலையில் திருமணங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. ஆகவே தமிழக அரசு இந்த துறையில் உள்ளவர்களுக்கு ஏதேனும் உதவி புரிய வேண்டுமென்கின்றனர் இந்த துறையை சார்ந்த பணியாளர்கள்.

மேலும்., ஒரு சிலர், அரசின் உதவித்தொகை கிடைத்தால் குடும்ப வருவாயை ஈட்டிக்கொள்ளலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் மட்டுமே சுமார் ஆயிரம் நபர்கள் நேரிடையாக போட்டோகிராபர்ஸ் மற்றும் வீடியோகிராபர்ஸ் ஆக உள்ள நிலையில்,. மறைமுகமாக இந்த பணியினை நம்பி உள்ள பிரேம் ஒர்க்கர்ஸ், ஆல்பம் கிரியேட்டர்ஸ், ஆல்பம் மேக்கிங், போட்டோ டிசைனிங்,   லேமினேஷன், வீடியோ எடிட்டிங் உள்ளிட்ட பணிகளில் மட்டும் சுமார் 5 ஆயிரம் நபர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆகவே இந்த தொழிலாளர்களையும் அவரது குடும்பத்தினரையும் காக்க, அரசு உதவிட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு நேரத்திலும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி