Publish Date: Mon, 09 Aug 2021 (13:42 IST)
Updated Date: Mon, 09 Aug 2021 (15:36 IST)
புதுச்சேரியில் மேலும் 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,21,665 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,21,665 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 834 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,19,031 பேர் கொரோனவிலிருந்து குணமடைந்துள்ளனர்.