Publish Date: Sat, 05 Feb 2022 (23:30 IST)
Updated Date: Sat, 05 Feb 2022 (23:33 IST)
தமிழகத்தில் கொரொனா பாதிப்புகள் சில நாட்களாகக் குறைந்து வருகிறது. இன்று 8 ஆயிரத்திற்குக் கீழ் கொரொனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் முக்கிய காலக்கட்டம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரொனா 3 ஆம் அலையில் அடுத்த வாரம் மிக முக்கியமான காலக்கட்டம் என்பதால் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.