Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

Siva
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (07:30 IST)
ஏற்கனவே பூமி பூஜை நடைபெற்ற ரோட்டுக்கு மீண்டும் பூமி பூஜை செய்தமை தொடர்பாக, அமைச்சர் மூர்த்தியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலாக கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

“போட்ட ரோட்டுக்கு மறுபடியும் பூமி பூஜை செய்கிறார் அமைச்சர் மூர்த்தி. அவரிடம், ‘இந்த இடத்திற்குக் ஏற்கனவே பூமி பூஜை நடைபெற்றுவிட்டது’ என்று அதிகாரிகள் கூறியிருந்தார்களா? அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தால், அவர் போயிருக்க மாட்டார். எனவே அதிகாரிகள் ஏன் சொல்லவில்லை?” என்று அமைச்சர் மூர்த்தியைப் பற்றிக் கேள்வி எழுப்பும்படி பத்திரிகையாளர்களிடம் செல்லூர் ராஜு கிண்டலாகக் கூறினார்.

மேலும், “தெர்மாகோல் விஷயத்துக்காக என்னை ஓட்டினீர்கள், அது போல, இப்போது அமைப்பு அமைச்சர் மூர்த்தியையும் நீங்கள் ஓட்டுங்கள்” என்று அவர் கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ மூர்த்தி என்கிட்டயும் மக்களிடையுமாக, நன்றாக மாட்டிக்கொண்டு விட்டார். இது மாதிரி அதிகாரிகள் சொன்னதால்தான் நானும் தெர்மாகோல் விஷயத்தில் ஏமாந்தேன். அதிகாரிகள் சொல்வதில்தான் அமைச்சர்கள் செயற்படுகிறார்கள். தெர்மாகோல் விஷயத்தில் என்னை மட்டும் ஓட்டினீர்கள்... இப்போ அமைச்சர் மூர்த்தியையும் ஓட்டுங்கள்,” என அவர் கூறியது பத்திரிகையாளர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது.

Edited by Siva  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments