Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீங்க முதல்ல வேங்கைவயல் போனீங்களா? விஜய் அரசியல்வாதியே இல்ல! - திமுக அமைச்சர் விமர்சனம்!

Sathur Ramachandran

Prasanth Karthick

, திங்கள், 9 டிசம்பர் 2024 (09:36 IST)

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் “சமூக நீதி பேசும் அரசு வேங்கைவயல் கொடுமைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கித் தலைகுனிவார்” என பேசியிருந்தார்.

 

விஜய்யின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் “முதலில் வேங்கைவயலுக்கு விஜய் சென்றாரா? அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் சொன்னாரா? இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கூட களத்தில் இறங்கி சென்று அவர் சந்திக்கவில்லை. அவர்களை தன் வீட்டிற்கு வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார். இதுதான் அவர் அரசியல்.

 

அவரை அரசியல்வாதியாக திமுக அங்கீகரிக்கவில்லை. அவரை பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. முதல்வர் சொன்னது போல நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மணிப்பூருக்கு போக விரும்பினால் நான் அழைத்துச் செல்கிறேன்! - பாஜக தலைவர் அண்ணாமலை!