Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக, பாஜக பிரமுகர்கள் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

enforcement directorate

Mahendran

, வெள்ளி, 29 நவம்பர் 2024 (11:17 IST)
புதுக்கோட்டையில் அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்களின் மூன்று வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், கரம்பக்குடி தாலுகா கடுக்காய்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் சகோதரர்கள் அதிமுகவில் நிர்வாகிகளாக இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகானந்தம் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் பாஜக மாவட்ட பொருளாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் ஒப்பந்ததாரர்களாக உள்ள நிலையில், அவர்களது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஆலங்குடியைச் பழனிவேல் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த மூன்று வீடுகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கியுடன் ஆயுதப் படையினர் உள்ளனர். இன்று காலை முதல் நடந்து வரும் இந்த சோதனையால் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதானி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. அமெரிக்க ஊடகத்தின் செய்தியால் பரபரப்பு..!