Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்துக்களுக்கு ஆபத்து? வீடுகளில் வாள், சூலாயுதம் வைத்திருங்கள்!? - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

Advertiesment
BJP Minister

Prasanth Karthick

, புதன், 23 அக்டோபர் 2024 (08:30 IST)

இந்துக்கள் தங்கள் வீடுகளில் தற்காப்புக்காக சூலாயுதம், வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பீகார் மாநிலத்தில் நடந்து வரும் இந்து ஸ்வாபிமான் யாத்திரையின் ஒரு பகுதியாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷன்கஜ்ச் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். 

 

அப்போது பேசிய அவர் “கிஷன்கஞ்சிற்கி வருவதற்கு முன்பு நான் பூர்னியா, கதிஹார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் தங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் பல இந்து பெண்கள் லவ் ஜிஹாத் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் வலையில் விழாத பெண்களிடம் அவர்கள் தவறாக நடந்து கொள்கிறார். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை.

 

இந்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இதை எதிர்கொள்ள இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். ஒவ்வொரு இந்துக்கள் வீட்டிலும், இந்து கடவுளர்கள் வைத்திருப்பது போல ஈட்டி, சூலாயுதம், வாள் போன்றவற்றை வைத்து வணங்க வேண்டும். அவற்றை தேவைப்பட்டால் தற்காப்புக்காக பயன்படுத்த வேண்டும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி.. முக்கிய பேச்சுவார்த்தை?