Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம்!

என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம்!

J.Durai

, வியாழன், 19 செப்டம்பர் 2024 (09:56 IST)
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது இங்கு சுரங்கம் 1,  சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு  மின் உற்பத்தி செய்து வருகின்றனர் இதில் 8000 நிரந்தர தொழிலாளர்களும் பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி  வருகின்றனர்.
 
இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் என்எல்சியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், நிரந்தர தொழிலாளர்களுக்கும் அதிகமாக போனஸ்  வழங்கப்படுகின்றனர்,
 ஆனால் அங்கு பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளிக்கும் சொசைட்டி தொழிலாளர்களுக்கும் 8.33 சதவீதம் போனசாக  வழங்குகின்றனர்.
 
என்எல்சி நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் 20% போனஸ் வழங்க கோரி நெய்வேலி
கியூபாலத்தில் இருந்து என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்கள் நேற்று மாலை பேரணியாக சுரங்க நிர்வாக அலுவலகம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்துனர் பின்னர் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பின்னர் இரவு ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுடைய செல் போன் லைட் அடித்து கண்டன முழக்கங்களை எழுப்பி சுரங்க நிர்வாக அலுவலகம் நோக்கி மீண்டும் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் பின்னர் தொழிலாளர்கள் இரவு முதல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக பிரமுகர் மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து - பெட்ரோல் கேனுடன் குடும்பத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்!