Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடரும் வாகன ஓட்டிகள் மீதான போலீஸ் தாக்குதல்கள்

Advertiesment
தொடரும் வாகன ஓட்டிகள் மீதான போலீஸ் தாக்குதல்கள்
, புதன், 6 டிசம்பர் 2017 (18:03 IST)
வாகன சோதனையின் போது காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியதில், மாணவன் காதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களே அவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது மறுக்க முடியாத உண்மை. மக்கள் தவறு செய்தால் போலீஸிடம் புகார் செய்யலாம், ஆனால் போலீஸே இது போன்ற மிருகத்தனமான செயல்களை செய்தால் யாரிடம் புகார் கூறுவது? 
 
சமீபத்தில் கன்னியாகுமரியில் வாகன சோதனையின்போது வண்டியில் நிற்காமல் சென்ற வாலிபர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல்நிலையம் அருகே மூன்று மாணவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்ததை கண்ட உதவி ஆய்வாளர் மாதவன், அவர்களை தடுத்து நிறுத்தினார். இருசக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்த சென்ற போது உதவி ஆய்வாளர் மாதவன் மிதுன் என்ற மாணவனின் காதின் மேல் பலமாக அடித்துள்ளார். இதனால் மாணவனின் காதில் ரத்தம் வழிய தொடங்கியது.  பின் தொண்டாமுத்தூர் அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு 
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
 
இது தொடர்பாக  காவல் உதவி ஆய்வாளர் மாதவனிடம் கேட்டபோது மாணவனை நான் தாக்கவில்லை என்று மறுத்துவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜேஷ் லக்கானியுடன் விஷால் சந்திப்பு: மீண்டும் வேட்புமனு மறுபரிசீலனையா?