Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் காந்தியை சந்திக்கிறாரா விஜய்? 2 திராவிட கூட்டணியையும் வீழ்த்த திட்டமா?

Advertiesment
விஜய்

Siva

, வெள்ளி, 13 ஜூன் 2025 (11:58 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகிய இருவரையும் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு திராவிடக் கூட்டணிகளையும் வீழ்த்த ஒரு மிகப்பெரிய ராஜதந்திரத் திட்டம் தயாராகி வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு பக்கம் திமுக கூட்டணி வலிமையாக இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்த்து வருகிறது. இந்த நிலையில், விஜய் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், விரைவில் அவர் ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 
 
காங்கிரஸ் - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைந்தால், இந்த கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்தக் கூட்டணி எதிர்பார்த்தபடி அமைந்தால் கண்டிப்பாக அதிமுக, திமுக என இரண்டு திராவிடக் கூட்டணிகளையும் வீழ்த்தும் என்று தமிழக வெற்றி கழக தொண்டர்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18 மாத கைக்குழந்தையுடன் வந்த AI நிறுவனத்தின் CEO.. தொழில்நுட்ப விழாவில் அனுமதி மறுப்பு..!