Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட வேண்டாம்.. காங்கிரஸ் பிரச்சாரத்தால் பரபரப்பு..!

Siva
வியாழன், 25 ஏப்ரல் 2024 (08:16 IST)
காங்கிரஸ் கட்சியை தனது சொந்த கட்சி வேட்பாளருக்கே ஓட்டு போட வேண்டாம் என பிரச்சாரம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் என்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அரவிந்த் தாமோதர் என்று அறிவித்த நிலையில் அதன் பின்னர் திடீரென காங்கிரஸ் கட்சி பாரத் ஆதிவாசி கட்சியுடன் கூட்டணி அமைத்து அந்த தொகுதியை அந்த கட்சிக்கு ஒதுக்கியது

இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அரவிந்த் வேட்புமனுவை வாபஸ் பெறும்படி தலைமை கூறிய போது அவர் வேட்புமனுவை வாபஸ் செய்ய முடியாது என்று கூறிவிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்

இந்த நிலையில் தற்போது தர்ம சங்கடத்திற்கு உள்ளான காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்யும்போது தங்களது கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் பாரத் ஆதிவாதி கட்சிக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்து வருகிறது

இந்த தொகுதியில் அரவிந்த் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்றும் பாரத் ஆதிவாசி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது

இது குறித்து அரவிந்த் கூறுகையில் மக்கள் எனக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என்றும் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments