தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில வாரங்களாக தீவிர பிரச்சாரம் செய்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி இன்று தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பெங்களூரில் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தமிழர்கள் இருக்கும் பகுதியில் தமிழில் பேசி அவர் வாக்கு சேகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் ஜெயநகர், பி டி எம் லே-அவுட் பகுதிகளில் தமிழிலும் மற்ற பகுதிகளில் கன்னடத்திலும் அவர் பேசி வருவதாகவும் தேஜஸ்ஸ்ரீ சூர்யாவுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
மேலும் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடும் பிசி மோகன் அவர்களுக்கு வாக்கு சேகரித்தார் என்பதும் தமிழர்கள் பகுதியில் பெரும்பாலும் தமிழில் பேசி அவர் வாக்கு சேகரிப்பதால் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது
கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டளங்காக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.