Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடிக்கு ரூ.101 மொய் பணம் அனுப்பிய காங்கிரஸார்

Advertiesment
மோடிக்கு ரூ.101 மொய் பணம் அனுப்பிய காங்கிரஸார்
, செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (16:58 IST)
பிரதமர் மோடியினை கண்டித்து கரூரில் காங்கிரஸார் திடீரென்று ஆர்பாட்டம் மற்றும் ரூ 6 ஆயிரம் நிவாரண நிதி என்பது வெறும் கண் துடைப்பு தான் என்றும் அதனை கண்டித்தும்,  அந்த பணத்தினை திருப்பி மோடிக்கே தலா ரூ 17 வீதம், டி.டி. சார்ஜ், ரிஜிஸ்டர் போஸ்ட் என்று மொத்தம் தலா ரூ 101 ஐ மொய் பணமாக அனுப்பிய கரூர் மாவட்ட காங்கிரஸ் விவசாய அணியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது., விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ 6 ஆயிரம் என்று பாரத பிரதமர் அறிவித்தார். அது போதாது என்றும், விவசாயிகளுக்கு ரூ 12 ஆயிரம் வேண்டுமென்றும் ஆங்காங்கே பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்., கரூரில் பாரத பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தும், அவருக்கே, அந்த தொகையினை திருப்பி அனுப்பிய காங்கிரஸ் கட்சியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



கரூர் தலைமை தபால் நிலையம் அருகில், கரூர் மாவட்ட விவசாய அணி தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில்., காங்கிரஸ் நிர்வாகிகள் ரூ 17 ஐ டி.டி ஆக எடுத்து அதற்கான டி.,டி செலவு ரூ 59 மற்றும் ரிஜிஸ்டர் தபால் ரூ 25 என்று தலா ரூ 17 க்கு மொத்தம் ரூ 101 ஐ மொய் பணமாக பிரதமர் மோடிக்கு., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் பேங்க்.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அவருடைய பங்களிப்பாக ரூ 17 ம் வங்கி டி.டி யாக கொடுத்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் பாபு., கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் சுரேகா பாலசந்தர், கரூர் மாவட்ட விவசாய அணி துணை தலைவர் தாந்தோன்றி குமார்., மாவட்டத்துணை தலைவர் சின்னையன்., இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரேம் குமார், மாவட்ட செயலாளர் வெள்ளக்கண்ணு உள்பட சுமார் 15 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, டி.டி அனுப்பும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். முன்னதாக பிரதமர் மோடி ஏழை விவசாயிகளை ஏமாற்றுவதாகவும், விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதனை மறந்து விட்டு, பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.


சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மம்தாவா... நானா... ஒரு கை பாத்திடுறேன்!