ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் கவர்னர் தனது மாளிகையில் தேநீர் விருந்து வைக்கும் நிலையில் இந்த ஆண்டும் அது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளை மறுநாள் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் சுதந்திர தின கொடியேற்றத்துக்கு பிறகு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
தேநீர் விருந்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த இரு கட்சிகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில நலனுக்கும் மாநில அரசுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினர் தேநீர் வழங்க ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகள் இதுவரை தேநீர் வசதி புறக்கணிப்பதாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பாக திமுக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.