Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிமுக நிர்வாகி மேற்பார்வையாளரா? என்ன கூத்து இது?

காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிமுக நிர்வாகி மேற்பார்வையாளரா? என்ன கூத்து இது?
, ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (19:10 IST)
நாங்குநேரி காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் தொகுதி மேற்பார்வையாளராக அதிமுக நிர்வாகி கே.பி.கே.செல்வராஜ் பெயர் இடம்பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகி அதிமுகவில் இணைந்த கே.பி.கே.செல்வராஜ், நெல்லை மாவட்ட புறநகர் சிறுபான்மை பிரிவு அதிமுக துணை செயலாளராக தற்போது உள்ளார். கே.பி.கே.செல்வராஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்து பதவியும் பெற்றதை கூட தெரியாத காங்கிரஸ் நிர்வாகிகள் அவரது பெயரை நாங்குநேரி காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் தொகுதி மேற்பார்வையாளராக பட்டியல் இட்டிருப்பதை சமூக வலைத்தள பயனாளிகள் கிண்டலடித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் மட்டுமே இது சாத்தியம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 
 
ஒரே ஒரு தொகுதியில் வேட்பாளரை அறிவித்து அதில் தேர்தல் பணிக்குழுவில் தொகுதி மேற்பார்வையாளர்கள் அறிவிப்பதிலேயே இவ்வளவு குழப்பம் இருந்தால் இந்த கட்சி எப்படி வெற்றியை பெறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பணிக்குழுவில் தொகுதி மேற்பார்வையாளர் பட்டியலில் இருந்து கே.பி.கே.செல்வராஜ் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபராதம் கேட்டால் தற்கொலை செய்துகொள்வேன்: போலீசாரை மிரட்டிய இளம்பெண்ணால் பரபரப்பு