மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கோவையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு நடத்துவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ள நிலையில் அதில் ராகுல் காந்தி கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஏர்கலப்பை பேரணி நடைபெறும் என்றும், அதில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் முன்னதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நவம்பர் 22ம் தேதி கோவையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு நடைபெறும் என்றும்,அதை தொடர்ந்து அன்று மாலையே ஏர்கலப்பை பேரணி நடைபெறும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் ராகுல் காந்தி கலந்து கொள்வது பற்றி எந்த தகவலும் இல்லை என்றாலும், பாஜக வேல் யாத்திரைக்கு அமித்ஷா போன்ற மத்தியில் பிரபலமான தலைவர்கள் வருவதால், காங்கிரஸின் பேரணிக்கும் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.