கடந்த நான்கரை வருட பாஜக ஆட்சி மற்ற மாநிலங்களுக்கு எப்படியோ, தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு வரும் வரை நீதி கிடைக்கவில்லை. நீட், மேகதாது, பணமதிப்பிழப்பு, கஜா புயல் நிவாரண நிதி தராதது என பாஜகவை தமிழக மக்கள் பொது எதிரியாகவே பார்க்கின்றனர்.
இதனால்தான் சின்ன கட்சிகள் கூட பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளன. பாஜகவுக்கு தமிழகத்தில் இருப்பது வெறும் 2% ஓட்டுக்கள்தான். அதனால் பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் கூட்டணி வைக்கும் கட்சிக்கு எந்த பயனும் இல்லை என்பதும் இன்னொரு கணக்கு
இதே ரீதியில்தான் அதிமுகவும் யோசித்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கிறிஸ்துவ, முஸ்லீம் மக்களின் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாக இழக்க வேண்டிய நிலை வரும் என்பதால் தற்போதைக்கு பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் தேர்தலுக்கு பின்னர் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பாஜகவுடன் ஆதரவு கொடுது கொள்ளலாம் என்பதே அதிமுகவின் முன்னணி தலைவர்களின் எண்ணமாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன