தமிழக வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கேட்கவில்லை என்றும், ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் அனுமதி கேட்ட நிலையில், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தரும் நிலையில், பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தை அவர் திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகிய இருவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பிரதமரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.