Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம்: ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அதிர்ச்சி

Advertiesment
transport
, செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (09:05 IST)
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கும் வகையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப் படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 
 
போக்குவரத்து கழகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில் போக்குவரத்து கழக வருவாயை அதிகரிக்க போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று போக்குவரத்து கழகத்திற்கு வருவாயை அதிகரிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாயை அதிகரித்து நிதிச் சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
 
இதனால் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னியாகுமரியில் நாளை நடைபயணம் தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!