Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உட்கட்சி நிர்வாகி மீது புகார்....முதல்வர் ஸ்டாலின் எப்போது சாட்டையை சுழற்றப்போகிறார்?

Advertiesment
உட்கட்சி நிர்வாகி மீது புகார்....முதல்வர் ஸ்டாலின்  எப்போது சாட்டையை சுழற்றப்போகிறார்?
, செவ்வாய், 21 ஜூன் 2022 (19:18 IST)
இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் திரு.முத்துராமலிங்கம்  மீது தலைமையிடம் புகார் தெரிவித்த 15 திமுக ஒன்றிய  செயலாளர்கள். அதிர்ச்சி தகவல். 
 
ராமநாம்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பணத்தை பெற்றுக்கொண்டு தனக்கு வேண்டியவர்களை ஒன்றிய செயலாளராக நியமிக்க மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் திட்டம் தீட்டியுள்ளதாக திமுக நிர்வாகிகர் குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.
 
இதன் தொடர்ச்சியாக, கடந்த 6மாதங்களுக்கு முன்பாக பல இடங்களில் ஒன்றிய செயலாளர் பொறுப்பு தருவதாக கூறி மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் , திமுக பிரமுகர்களிடம் பல லட்சம் பேரம் பேசி பணம் பெற்றுள்ளார் என்று மாவட்ட திமுகவினர் அண்ணா அறிவாலயத்திற்கு  புகார் தெரிவித்துள்ளனர். 
 
அந்ந வகையில், திருவாடானை ஒன்றியம்,  ராஜாராம் மற்றும் 
விஜய் கதிரவன் ஆகியோரும், 
திருப்புல்லாணி ஒன்றியத்தைச் சேர்ந்த  அப்பாஸ்கனி ஆகியோரும், 
 
மண்டபம் ஒன்றியத்தைச் சேர்ந்த,  நிலோபர் மற்றும் வாலாந்தரவை பிரவீன் மற்றும்
முத்துக்குமார் ஆகியோர்போகலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த , சேர்மன் குணசேகரன்    அதே போன்று அனைத்து ஒன்றியங்களிலும் பலரிடம் பணவேட்டை நடந்துள்ளது என்று புகார் பறந்துள்ளது. 
 
இந்த நிலையில் இந்த பிரச்சனையை சுட்டிக் காட்டும் உ.பிக்கள் , முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில், மாநில உளவுத்துறையை களத்தில் இறக்கி உண்மை நிலையை அறிந்து  மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கீழச்சிறுபோது கிராமத்தில் உள்ள 2 குடும்பத்தினர் விவகாரம் காவல்நிலையம் வரை சென்று பஞ்சாயத்தாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 50 திமுக குடும்பத்தினர் மாற்றுக்கட்சிக்கு செல்ல முடிவு உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறமு.  ஏற்கனவே, எம்பி தேர்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தை பாஜக குறிவைத்து செயல்படுத்தி வரும் நிலையில், திமுக பொறுப்பாளரின் செயல்பாடுகளால் திமுக பின்தங்கும் நிலை ஏற்படும் என உ.பிக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் கொதிநிலையில் உள்ளனர். எனவே, மாவட்டத்தில் நடக்கும் விவகாரங்களை, ஒவ்வொரு நகர மற்றும் ஒன்றியச் செயலாளர்களை தனித்தனியாக விசாரித்தாலே, பல உண்மைகள் வெளிவரும் என்கின்றனர். முதல்வர் ஸ்டாலின்  எப்போது சாட்டையை சுழற்றப்போகிறார்?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாவை வைத்து அரசியல் செய்ய நாங்கள் திராவிட கட்சி அல்ல: பாஜக