Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் வழக்கறிஞரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் மனோதங்கராஜின் தம்பி மீது புகார்!

பெண் வழக்கறிஞரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் மனோதங்கராஜின் தம்பி மீது புகார்!

J.Durai

, வெள்ளி, 11 அக்டோபர் 2024 (13:18 IST)
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அகிலா தேவி குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவருடைய கணவர் முத்தழகன் என்பவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த ஜினித் என்பவருக்கு தமிழக அரசின் டாஸ்மார்க் பார் நடத்துவதற்கு கடை ஒன்றை வாடகைக்கு எடுப்பதற்க்காக ஒரு லட்சம் ருபாயை வாங்கி கருங்கல் பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் ஜினித்துக்கு பார் நடத்த அனுமதி கிடைக்காததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார் அப்போது கடை உரிமையாளர் முன் பணமாக வாங்கிய பணத்தை மூன்று வருடங்கள் கழித்து தருவதாக கூறி உள்ளார்.
 
இதற்கிடையே ஜினித்திற்கு அறிமுகமான முன்னாள் அமைச்சர் மனோதங்கராஜின் சகோதரர் ஜெயன் தங்கராஜ் முத்தழகனிடம் பணத்தை திரும்ப கொடுக்க கேட்டு மிரட்டி உள்ளார் இதற்கிடையே கடந்த ஒருசில மாதங்களுக்கு முன் முத்தழகன் நண்பர் பென்சாம் என்பவரை கடத்தி வைத்துள்ளதாக கூறி அடுத்து முத்தழகனை தூக்கப்போவதாக மிரட்டி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் இந்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் ஜெயன் தங்கராஜ் முத்தழகனின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி உள்ளார் இதனை தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரையும் தாக்கி உள்ளார்.
 
இது குறித்து பெண் வழக்கறிஞர் அகிலா தேவி 100 க்கு அழைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார் தகவலறிந்து வந்த போலீசார் அங்கிருந்து ஜெயன் தங்கராஜை காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளனர் இதனை நம்பி பின்னால் கணவருடன் வழக்கறிஞர் காவல்நிலையம் சென்றபோது அங்கு ஜெயன் தங்கராஜ் இல்லை அவரை போலீசார் வரும் வழியிலேயே எந்த விசாரணையும் செய்யாமல் அனுப்பி வைத்துள்ளனர்.
 
இதனால் தனக்கு நீதி வேண்டும் என்று பெண் வழக்கறிஞர் காவல்நிலையம் முன் காத்திருந்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 நாள் சரிவுக்க்கு பின் தங்கம் விலை இன்று உயர்வு. சென்னை விலை நிலவரம்..!